வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்..
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா நாங் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 586,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புயலுடன் கனமழை பெய்யும் என்றும், அப்பகுதியில் உள்ள விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கஜிகி சூறாவளியானது வியட்நாமுக்கு வருவதற்கு முன்பு சீனாவின் ஹைனான் பகுதியையும் தாக்கியது. அப்போது, சூறாவளியால் 320 மில்லிமீட்டர் மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.