களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 வயதுடைய கணவர் வீடு திரும்பியபோது, மனைவி தனது திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்ட நபருடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துப் பொலிஸார் கூறுகையில், குறித்த நபர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரது மனைவி வேறொரு நபருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மன விரக்தியில் கணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனடியாக களுத்துறையில் உள்ள நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
வீட்டுக்கு வந்தபோது, அவரது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மனைவி, வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள், தேசிய அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்களை லொறி ஒன்றில் ஏற்றி, தனது கள்ளக்காதலனுடன் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கணவருக்கு குறுஞ்செய்தி ஒன்றையும் மனைவி அனுப்பியுள்ளார்.
In a shocking incident in Kalutara, a 23-year-old man returned home from the hospital after a suicide attempt and discovered that his wife had fled with her lover. The man had consumed poison after a heated argument with his wife, who he found talking to another man on the phone. After four days of treatment at Nagoda Hospital, he returned home to find his wife, daughter, and several valuables—including cash, gold jewelry, and official documents—missing. Police, who are investigating the incident, stated that the wife had left a text message telling her husband not to bother her.