பசறை, தஹா கனாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (31) இரண்டு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர். அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களது சடலங்களில் எந்தக் காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரே வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பாக விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Two young men, aged 28 and 33, were found dead under mysterious circumstances in a house in the Dahakanawa area of Passara. Passara Police discovered the bodies after receiving a tip-off from an emergency ambulance service. According to police, there were no visible injuries on the bodies. A comprehensive investigation has been launched to determine the cause of death.