Thursday, November 27, 2025

வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர்!

சில நாட்களுக்கு முன்பு போலித் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ‘மதுவா’ என்றழைக்கப்படும் ரெப் பாடகர் மாதவ பிரசாத், தற்போது வெடிபொருட்களுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 3 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3 கிலோகிராம் 500 கிராம் அமோனியா நைதரசன் இரசாயனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஓகஸ்ட் 25-ஆம் திகதி போலித் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட இந்த ரெப் பாடகர், பிடிபனவின் கலஹேனையில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாகப் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

விசாரணையின் போது, மற்றொரு ரெப் கலைஞருடன் வந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த வெடிபொருட்களைத் தன்னிடம் கொடுத்து வைத்திருக்குமாறு கூறியதாக மதுவா தெரிவித்துள்ளார். அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் சில மாதங்களுக்கு முன்பு கொடவில பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியைத் திருடியதற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கஹதுடுவ பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

‘Madhuwa’ (Madawa Prasad), a Sri Lankan rapper who was recently arrested with a fake gun, has been re-arrested with explosives. According to Kahathuduwa Police, the suspect was found with 3 gelatin sticks, 5 detonators, and 3.5 kilograms of ammonium nitrate.

Police received a tip that the rapper had hidden the explosives behind his house. During questioning, Madhuwa claimed that a police constable, who is currently in remand for stealing a gun from the Godawila Police Station, gave him the explosives to hold.

Further investigations into the matter are ongoing.

Hot this week

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

Topics

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img