பிர்னி என்பது எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஓர் இனிப்பு வகை. இது பெரும்பாலும் வட இந்தியர்களால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. இதைச் சிறிய மண் பானைகளில் வைத்து, குளு குளுவென்று பரிமாறுவார்கள். பொதுவாகக் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் இந்த குளு குளு மண் பானை பிர்னியை வீட்டிலேயே எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- அரிசி- 1 கப்
- கண்டன்ஸ்டு மில்க்- தேவையான அளவு
- சர்க்கரை- தேவையான அளவு
- கோவா- தேவையான அளவு
- பாதாம்- தேவையான அளவு
- குங்குமப்பூ- தேவையான அளவு
- வெள்ளி வர்க்- தேவையான அளவு
- பால்- அரை லிட்டர்
செய்முறை:
படி 1: முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, பால் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பால் கெட்டியானதும், அதில் ரவை சேர்த்து மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
படி 2: இப்போது, சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் கண்டன்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். இந்தக் கலவை கெட்டியாகத் தொடங்கும்போது கட்டி சேராமல் இருக்கக் கைவிடாமல் கிளறவும். பிறகு, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் வேக விடவும்.
படி 3: கலவை கெட்டியாகி, பாத்திரத்தின் அடியில் ஒட்டத் தொடங்கும். அப்போது கைவிடாமல் தொடர்ந்து கிளறுங்கள்.
படி 4: பிர்னி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, இந்தக் கலவையை ஆற விட வேண்டும். பிறகு இதைச் சிறிய மண் பானைகளில் ஊற்றி, அலுமினிய ஃபாயில் பேப்பர் கொண்டு மூடி, ஃபிரிட்ஜில் ஃபிரீசரில் வைக்கவும். சாப்பிடுவதற்கு முன்பு ஃபிரிட்ஜிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.