இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இலங்கையின் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு, பாணந்துறை நிலங்க ஆகியோர் அடங்குவதாகவும், இவர்களுடன் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Six members of a Sri Lankan underworld gang have been arrested in Jakarta, Indonesia. According to police spokesperson ASP F.U. Woodler, the arrests were a joint operation between the Criminal Investigation Department and Interpol. The individuals arrested include notable gang members such as Kehalpathara Pathme, Commando Salinda, Pekko Saman, Thimbili Lahiru, and Panadura Nilanga, along with a woman.