வட கொரியாவில் தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது, பகிர்வது கடும் குற்றம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை!
வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன.
வட கொரியாவில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஓர் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வெளியிட்டுள்ளது. வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன், தென்கொரியாவின் பிரபலமான ‘கே-டிராமாக்கள்’ உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காகப் பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கான தீர்மானத்திற்கு அனுமதியளித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டையும் எதிர்ப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
A United Nations human rights report has revealed that watching or sharing foreign television shows, particularly South Korean dramas, is a serious crime in North Korea, with several people already having been executed for the offense. The report, based on interviews with over 300 defectors, was completely rejected by the North Korean government.