Thursday, November 20, 2025

18 வருடங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பியவர் மீது கொடூரத் தாக்குதல்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி!

இந்தியாவிலிருந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு படகு மூலம் தாயகம் திரும்பிய ஒரு குடும்பஸ்தர், கடற்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவந்த தகவலின்படி, முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர், 2007ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் கடல் வழியாக இந்தியா சென்றிருக்கிறார்.

கடந்த 18 வருடங்களாக அங்கேயே வசித்து வந்த அவர், மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார். அதன்படி, கடந்த 22ஆம் தேதி இந்தியாவில் இருந்து படகில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்திருக்கிறார்.

அப்போது தலைமன்னார் கடற்படையினர் அவரை கைது செய்துள்ளனர். 40 வயதாகும் அவருக்கு இதய நோய் இருப்பதற்கான மருத்துவ அறிக்கைகளையும் உடன் கொண்டு வந்திருக்கிறார். இருந்தபோதிலும், தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபரை, கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

பின்னர், கடற்படையினர் அவரை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க, பொலிஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவரை, பதில் நீதவான் பார்வையிட்டபோது, எதிர்வரும் 28ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதய நோயாளியான தான், மருத்துவ அறிக்கைகளைக் காட்டியபோதும் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியதாக அவர் தனது உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Hot this week

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...

பாடசாலை மாணவர்களில் புகைத்தல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச...

வெளிநாட்டவர்களின் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் புதிய திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

கொட்டாஞ்சேனை படுகொலை; சந்தேகநபர் ‘ஐஸ்’ உடன் கைது!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த துப்பாக்கிதாரி,...

மஹியங்கனையில் கொலை; மனைவியும் கள்ளக்காதலனும் கைது!

மஹியங்கனைப் பொலிஸாரால் மனிதக் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும்,...

Topics

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

இரவு துப்பாக்கிச்சூடு; மூத்த தம்பதி பலி!

தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று (18)...

Vacancy Rider

Vacant for Nedunkeny Route Position Rider Basic salary and Allowance perday(each...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img