இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய 20 வயது இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை பரங்கிமலையிலுள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கல்லூரியில் படிக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜிக் முகமது (20) என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அந்தப் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்தபோது, அவர்கள் ராஜிக் முகமதுவுடன் பழகுவதைத் துண்டிக்குமாறு கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இதனால், அந்த மாணவி இளைஞனிடம் பழகுவதைத் நிறுத்திவிட்டார்.
இந்தச் சூழலில், கல்லூரி முடிந்து ஆலந்தூர் ரயில்வே நிலையம் சாலை வழியாக அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞன் மீண்டும் தன்னிடம் பழகுமாறு வற்புறுத்திக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
இது குறித்த முறைப்பாட்டின் பேரில், பரங்கிமலைப் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இளைஞனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
Police in India have arrested a 20-year-old man named Rajik Mohamed from Thanjavur district for allegedly assaulting a 20-year-old female college student in Chennai after she refused to continue their relationship. The relationship, which began while they were studying at the same college, was discontinued after the woman’s parents intervened. The assault occurred near the Alandur railway station road when the man forcefully demanded that she resume their contact.


