Monday, October 13, 2025

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது மதிக்கத்தக்க அந்த யுவதியை, பல்வேறு வகையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருந்தில் சென்ற அந்த யுவதியை பலமுறை சந்தேக நபர் அங்க சேட்டைகளுக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த யுவதி, வேறு பல பேருந்துகளுக்கு மாறிச் சென்றாலும், சந்தேக நபரின் தொந்தரவு தொடர்ந்ததால் கோபமடைந்து அவரைப் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், தன் சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்ததையடுத்து, குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், அந்தப் பகுதியால் வரும் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளனர். பொலிஸ் நிலையத்தை நெருங்கி வந்த அந்தப் பேருந்தை நிறுத்தி, சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில் அந்தச் சந்தேக நபர் நீண்ட தூரப் பயணங்களில் செல்லும் பேருந்துகளில் இதுபோன்று மோசமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம், குருணாகலில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த யுவதிக்கு நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

In Puttalam, a young woman traveling on a bus was continuously harassed by a man. The 21-year-old woman, who was heading to a church, was repeatedly subjected to sexual misconduct by the 45-year-old suspect. Despite changing buses, the harassment continued, prompting her to take a photo of the man and report the incident to the police. The police quickly intervened, stopping the bus near the station and arresting the suspect. Investigations revealed that the man was a habitual offender on long-distance buses.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img