ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிக்கு ஒருவர் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிக்கு, அலவ்வ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு விகாரையில் பணியாற்றி வந்தார் எனவும், அவருக்கு 38 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து 10.3 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற இரு சந்தேக நபர்களும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களும் நேற்று (17) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த “நேவி தினேஷ்” என்ற நபரால் வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Three individuals, including a Buddhist monk, were arrested in Matale by the Criminal Investigation Division for possessing heroin. The 38-year-old monk from a temple in the Alawwa police area had 10.3 grams of heroin, while the other two suspects had 17 grams. The trio, who are allegedly part of a drug trafficking gang led by a person known as “Navy Dinesh,” were remanded for seven days by the Polgahawela Magistrate’s Court for further investigation.