மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓர் வெளிநாட்டுப் பெண், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (17) பிற்பகல் நிகழ்ந்தது. காப்பாற்றப்பட்டவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 28 வயதுடையப் பெண் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று பிற்பகல் மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் கடலில் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட அங்குக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், உடனடியாகச் செயல்பட்டு அப்பெண்ணைக் காப்பாற்றி, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
An Austrian woman was rescued by the police life-saving unit after she nearly drowned in the sea at Mirissa. The 28-year-old woman was swimming when she suddenly sank, and the officers on duty were able to save her and provide first aid.