Monday, October 13, 2025

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, தனியார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை (13) மோட்டார் சைக்கிளில் வந்த இந்த மர்மக் கும்பல், ஒரு வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி (ஆட்டோ) மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளது.

அதுமட்டுமின்றி, அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மல்லாகம் வீதியில், மாசியப்பிட்டி சந்திப் பகுதியில் வீதியின் நடுவே நிறுத்தி அதற்கும் தீ வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

An unidentified gang of four masked individuals set fire to private vehicles in the Sandilipay North area, which falls under the Manipay Police Division. The masked group, arriving on a motorcycle in the early hours of the morning, set fire to a parked three-wheeler and then took a motorcycle from the same location, drove it about a kilometer away, and set it alight in the middle of the road. A complaint has been lodged with the Manipay Police, and investigations are currently underway.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

Topics

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...

நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம்; முன்பள்ளி உதவி அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img