Thursday, September 4, 2025

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக்கொண்டதால் ஆத்திரமடைந்த 26 வயது இளைஞன், தன்னுடைய 52 வயதுக் காதலியைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை மீட்ட பொலிஸார், நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஃபரூக்காபாத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 26 வயது இளைஞன் அருண் ராஜ்புத்தை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த ஒன்றரை வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகி வந்துள்ளனர். அதில், அந்தப் பெண் தன்னை மிகவும் இளமையாகக் காட்டிக்கொண்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக்கொண்டு இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். நேரில் சந்தித்தபோதுதான் அந்தப் பெண்ணின் உண்மையான வயது ராஜ்புத்துக்குத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அந்தப் பெண் ராஜ்புத்துக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும், கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறும் அருண் ராஜ்புத்திடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்புத், அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரது கைபேசியை எடுத்துக்கொண்டு சிம் கார்டை அப்புறப்படுத்தியுள்ளார்.

தொடர் விசாரணையில், அருண் ராஜ்புத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். திருமணம் செய்ய வற்புறுத்தியதும், கடனைத் திருப்பித் தருமாறு கேட்டதும், தன்னை வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியதுமே கொலைக்குக் காரணம் என ராஜ்புத் வாக்குமூலம் அளித்துள்ளார்.


 

In a shocking incident in Uttar Pradesh, India, a 26-year-old man was arrested for murdering his 52-year-old girlfriend, a mother of four, after she pressured him for marriage and to repay a loan. The two met on Instagram, where the woman used filters to appear younger. After meeting in person, the man discovered her real age. He confessed that he became enraged when she demanded marriage and repayment of the 1.5 lakh rupee loan. He then strangled her with her own dupatta.

Hot this week

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் காலி,...

புற்றுநோயால் வருடாந்தம் 200 குழந்தைகள் உயிரிழப்பு!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என...

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா? தற்போது வடக்கு மாகாண...

தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025)...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

Topics

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் காலி,...

புற்றுநோயால் வருடாந்தம் 200 குழந்தைகள் உயிரிழப்பு!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என...

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா? தற்போது வடக்கு மாகாண...

தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025)...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ்...

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம் வெளியானது!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானதைத் தொடர்ந்து,...

யாழ்ப்பாணத்தில் பச்சிளம் சிசு திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிறந்து வெறும் ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது....
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img