இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவைச் சேர்ந்த 37 வயதுடைய அங்கன்வாடி மேற்பார்வையாளரான முகேஷ் குமாரி என்ற பெண், தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று, கடந்த 10 ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம், பார்மர் நகரில் வசித்து வரும் பள்ளி ஆசிரியர் மனாராம் என்பவரை முகநூலில் நண்பராக அறிமுகம் செய்துகொண்டு, பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மனாராமிடம் கேட்டுள்ளார். ஆனால், மனாராம் தனது முதல் திருமண விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி முகேஷ் குமாரி தனது காரில் சுமார் 600 கிலோமீட்டர் பயணம் செய்து, மனாராமின் கிராமத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் தங்கள் உறவைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த மனாராம், பொலிஸாரை வரவழைத்து இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். அப்போது, திருமணம் குறித்துப் பிறகு பேசலாம் என முகேஷ்சிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இருவரும் தனியாக இருந்தபோது, மனாராம் இரும்புத் தடியால் முகேஷைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தை விபத்துபோலக் காட்ட வேண்டும் என்பதற்காக, முகேஷின் சடலத்தை காரில் அமர வைத்து, காரை சாலையிலிருந்து கீழே உருட்டிவிட்டுள்ளார்.
பொலிஸார் இந்தச் சம்பவத்தை விசாரித்தபோது, முகேஷ் இறந்த நேரத்தில் இருவரின் தொலைபேசிகளும் ஒரே இடத்தில் இருந்ததைக் கண்டுபிடித்து, மனாராமிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இறுதியில், மனாராம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
______________________________________________________________________
In India, a 37-year-old woman named Mukesh Kumari was found dead after traveling 600 kilometers to meet her boyfriend, Manaram. The two, who met on Facebook, had a relationship that turned sour when she asked him to marry her, a request he denied because of his ongoing divorce case. Mukesh then went to his village to reveal their relationship to his family. Out of anger, Manaram brutally killed her with an iron rod and tried to stage the crime as a car accident. Police investigated the case, found that both their phones were at the same location when she died, and subsequently arrested Manaram after he confessed to the crime.