கர்நாடகாவில் சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் பயின்றுவரும் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயதான அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பள்ளிக் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த சக மாணவிகள், உடனடியாக ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த ஆசிரியர்கள், தாயையும் சேயையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து விசாரித்த பொலிஸார், ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, 28 வயதான ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், விடுதிக் காப்பாளர் உட்பட நான்கு பேரை இடைநிறுத்தம் செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
In a shocking incident in Karnataka, a 17-year-old ninth-grade student gave birth to a baby boy in a school washroom. The student, who was staying at a government residential school, was taken to the hospital along with the newborn. Following a police investigation, the student revealed she had been sexually assaulted nine months ago. A 28-year-old man has been arrested in connection with the incident, while four school staff members, including the principal and a warden, have been suspended.