உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதோஹியைச் சேர்ந்தவர் ராம் சங்கர் பிந்த். கடந்த வெள்ளிக்கிழமை காலை, பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியிருந்த ஒரு மரத்தில் ஏறி, சுற்றுச்சுவரை தாண்டி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்.
அப்போது பாதுகாப்புப் பணியாளர்கள் அதைக் கவனித்து அவரை தடுத்து நிறுத்தி, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மத்தியப் புலனாய்வு அமைப்பு அவரிடம் விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணையின்போது எந்த சந்தேகத்திற்கிடமான ஆதாரங்களும் கிடைக்காததால் காவல் துறையினர் அவரை விடுவித்தனர்.
விசாரணையின் முடிவில், ராம் சங்கர் பிந்த் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல் துறை தெரிவித்துள்ளது.