போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. அதில், ஆறு பேர் கொண்ட ஒரு குழு, துப்பாக்கியை ஏந்தியபடி போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து கஹதுடுவ போலீசார் நடத்திய விசாரணையில், அந்தக் குழுவில் இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர் ஒருவரும் இருந்ததைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, ஹோமாகமவில் உள்ள அந்த இசைக்கலைஞரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், 20 மில்லிகிராம் ஐஸ், 25 கிராம் ஹேஷ் உட்பட போதைப்பொருட்களும், போலித் துப்பாக்கி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பாக கஹதுடுவ போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


