வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு – கருவாக்கேணி பிரதான வீதியில் இருக்கும் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் முன்னால் இருந்த மரத்தில், இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடந்தது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் 17 வயது மதிக்கத்தக்கவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ள வாழைச்சேனைப் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A 17-year-old boy was found dead, hanging from a tree, in the Valaichenai area. The Valaichenai police have started an investigation to determine the cause of his death.