தம்புள்ளை – ஹபரணை வீதியில் உள்ள ஹிரிவடுன்ன என்ற பகுதியில் பாரவூர்தி மோதியதில் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A baby elephant was killed in a road accident when it was hit by a cement truck on the Dambulla-Habarana road. The incident occurred in the early hours of Wednesday, and police are currently investigating.