கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26-ஆம் திகதி கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயப்படுத்தியதோடு, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சந்தேகநபரை களுத்துறையில் வைத்து நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர், நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய முன்னாள் நகர சபை உறுப்பினர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று (28) அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கொம்பனித்தெரு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A 52-year-old former municipal council member was arrested in Kalutara for allegedly assaulting a police officer during a protest near the Fort Magistrate’s Court on August 26. The suspect reportedly injured the officer by hitting him with a bottle. The Colombo Crimes Division, which made the arrest, handed the suspect over to the Kompany Street Police. He is scheduled to be presented before the Fort Magistrate’s Court today.


