மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த இரண்டு இடங்களில் மிரிஹான பொலிஸார் நேற்று (28) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
இந்தச் சுற்றிவளைப்பு மிரிஹான பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்தில், மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட உரிமையாளர்கள் தெய்யந்தர மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ராகமை, இரத்மலானை மற்றும் அங்குனுகொலபெலெஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் வயது 21 முதல் 40 வரையில் இருப்பதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Five people, including three women, were arrested in a police raid on two brothels operating under the guise of massage parlors in the Mirihana police division. The owners, a 40-year-old and a 50-year-old, were among those arrested. The three women arrested are aged between 21 and 40. The arrests were made following a tip-off received by the Mirihana Police, who are conducting further investigations.


