Tuesday, November 4, 2025

குளியாப்பிட்டிய விபத்து; சாரதி விளக்கமறியலில்!

குளியாப்பிட்டி, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் டிப்பர் வாகனமும் பாடசாலை வேனும் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், மூன்று பேர் உயிரிழந்ததோடு, 13 பாடசாலை மாணவிகள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதி, இன்று குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரான சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தூக்கமின்றி வாகனம் ஓட்டியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், எதிர்காலத்தில் குறித்த டிப்பர் வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

The driver of a tipper truck involved in a fatal accident in Kuliyapitiya, which killed three people, including two schoolgirls, has been remanded until September 8. The accident occurred when the tipper truck collided with a school van, injuring 13 other students. Police informed the court that the driver had been driving for over 24 hours without sleep, and a court order has been issued to take legal action against the truck’s owner as well.

Hot this week

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

Topics

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வலையம் அம்பலம் – 6 பேர் பிடியில்!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட...

பாடசாலை நேர நீட்டிப்பு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு...

WhatsApp ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img