திருகோணமலை, முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து விவசாயிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆறு விவசாயிகள் ஆஜர்படுத்தப்பட்டபோது,
அவர்களில் ஐந்து பேரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆறு விவசாயிகளில் ஒருவருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது. முத்துநகர் விவசாயப் பகுதியில் சூரிய மின் சக்தி நிறுவனம் ஒன்று முன்னெடுத்து வரும் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மற்ற மூன்று பேரும் அவர்களின் வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.
Five farmers from Muthunagar in Trincomalee have been remanded until September 4th. The farmers were brought before the Trincomalee Magistrate, who ordered the remand for five of them, while one was granted bail. The farmers were protesting against a solar power project being implemented by a private company in their agricultural area. Three of the farmers were arrested during a protest, and the other three were arrested at their homes.