நடைப்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்து, உடல் நலனை மேம்படுத்த முடியுமா என்று எப்போதாவது யோசித்ததுண்டா? நாம் வழக்கமாக மேற்கொள்ளும் 10,000 அடிகள் நடைப்பயிற்சியை விட அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஜப்பானிய இடைவெளி நடைப்பயிற்சி (Japanese interval walking) இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த முறையின் எளிமையும், அதனால் கிடைக்கும் விளைவுகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
விறுவிறுப்பான நடை மற்றும் மெதுவான நடை ஆகிய இரண்டையும் மாறி மாறிச் செய்வதே இந்த நுட்பத்தின் அடிப்படையாகும். ஜப்பானில் உருவாக்கப்பட்ட இந்த நடைப்பயிற்சி, அதன் செயல்திறன் காரணமாக உடற்பயிற்சி உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் இந்த நடைப்பயிற்சியின் ஆரோக்கிய நன்மைகளை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒருவர் 10,000 அடிகள் நடப்பதை விட, இந்த நுட்பமான இடைவெளி நடைப்பயிற்சியை மேற்கொண்டால் பல்வேறு நன்மைகளை அடைய முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது மூட்டு வலியை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
The article describes a Japanese interval walking technique that is gaining popularity worldwide as an effective way to improve health. This method, which involves alternating between brisk and slow walking, is said to be more beneficial than the traditional 10,000-step walk. According to experts, this simple technique can help reduce joint pain and control blood sugar levels.