களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் புதன்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லவாய, ஹபரணை, வவுனியா மற்றும் மஹகிரில்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்த பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று மாணவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Four students from the University of Kelaniya were arrested by the Criminal Investigation Department (CID) on Wednesday in connection with the alleged ragging of a fellow student. The arrests were made following a complaint and subsequent investigation. The suspects, aged 26 to 28, are from various areas. The CID also stated that they are taking action to arrest three more students linked to the incident.