மேல், சப்ரகமுவ, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று (2) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், ஊவா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியனின் தென்திசை நோக்கிய நகர்வு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7-ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் சில பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி, இன்று (2) பிற்பகல் 12.10 அளவில் ஆண்டிகம, பலல்ல, மீகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பகமுன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
The Department of Meteorology has forecast rain for several parts of Sri Lanka, including the Western, Sabaragamuwa, Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Thunderstorms are also expected in the Uva, Ampara, and Batticaloa districts after 2 PM. Strong winds are predicted in the western slopes of the central hills, North Central and North Western provinces, and Hambantota district. The department also noted that due to the sun’s southward movement, it will be directly overhead certain areas of the country until September 7, including Andigama and Eravur today.