ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் திகதி இரவு இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வேறு பல நாடுகளிலும் உணரப்பட்டிருந்தன.
நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 8 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
The death toll from the 6.0-magnitude earthquake that struck the Hindu Kush region of Afghanistan on August 31st has risen to 1,100, with over 3,500 people injured, according to international media reports. The earthquake, which was felt in several other countries, occurred at a depth of 8 kilometers.