இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த 36 வயது புத்தா வெங்கடேஸ்வர், தனது மனைவி தீபிகாவுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளார்.
குடும்பப் பிரச்சினையால் மனமுடைந்த வெங்கடேஸ்வர், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால், தான் இறந்தால் குழந்தைகள் சிரமப்படுவார்கள் என நினைத்து, தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மூன்று குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற அவர், அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் மூன்று குழந்தைகளும் தீயில் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், வெங்கடேஸ்வர் தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கணவனும் குழந்தைகளும் வீடு திரும்பாததால், தீபிகா பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், வெங்கடேஸ்வர் தனது குழந்தைகளைக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காணொளிக் காட்சிகளின் உதவியுடன் மூன்று குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்தக் கொடூரமான சம்பவத்தால் வெங்கடேஸ்வரின் மனைவி மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர்.
In a tragic incident in Andhra Pradesh, India, a 36-year-old man, Budda Venkateshwar, killed his three children before committing suicide. The man, who was reportedly depressed due to a family dispute with his wife, Deepika, decided to end his life. Believing that his children would suffer after his death, he poured petrol on them and set them on fire. He then committed suicide by consuming poison. The bodies of the father and children were later discovered by police following a complaint from Deepika. The incident has left the family and local community in shock.