கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல நபர்களுக்கு சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஆண் சந்தேகநபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேகநபர் கணேமுல்லையைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Police in Ganemulla arrested a man and a woman in the Horagolla area for illegally possessing 83 passports belonging to various individuals. The male suspect is a 51-year-old from Wattala, and the female suspect is a 62-year-old from Ganemulla. The Ganemulla Police are conducting further investigations into the incident.