வவுனியாவில், கடந்த 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தினர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் உத்தியோகபூர்வ கொசுவசச் சட்டை (T-shirt) வெளியீட்டு விழாவை SLRC மண்டபத்தில் வெகு சிறப்பாக நடத்தினர்.
இந்த நிகழ்வில், கழகத்தின் தாய் அமைப்பான யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறிக் கழகத்தின் தலைவர் RTN. கஜேந்திரா அவர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்று நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்கினர்.
அத்துடன், வவுனியா மாநகர சபையின் முதல்வர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் திரு குணசேகரன் கிருஷ்ணமூர்த்தி உட்படப் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும் வலு சேர்த்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக, கழகத்தின் நிதி திரட்டலுக்கான நிகழ்வும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் நிறைவில், சமூகப் பொறுப்புணர்வுடன், பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறிக் கழகத்தின் வழிகாட்டலின் கீழ் நடந்தேறிய இந்த நிகழ்வு, வவுனியாவின் சமூக சேவைப் பணிகளில் வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.
_______________________________________________________________________