தலைமன்னார் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில், அடையாளம் காணப்படாத ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சடலம், அடையாளம் காணப்படுவதற்காக மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பூலார் குடியிருப்பு காட்டுப் பகுதியில், கடந்த மாதம் 19ஆம் திகதி இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சடலம் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், இது பற்றிய விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரையில் சடலம் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதால், தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அறிவிக்குமாறு மன்னார் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார
________________________________________________________________________
An unidentified male body was discovered slightly burnt in the jungle area of Thalaimannar on the 19th of last month. The body has been placed in the mortuary of Mannar General Hospital for identification. As no information has been received so far, the Sudden Death Inquiry Officer of Mannar has requested anyone with information about the body to contact the Thalaimannar Police Station immediately to facilitate further action.