யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்வதற்காகச் சென்றிருந்தபோது, கூரை மரமொன்று முறிந்ததால், அதன்மீது இருந்தவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (08) உயிரிழந்தார். அவரது சடலம் மீதான திடீர் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
______________________________________________________________________
A 43-year-old man from Manipay, Jaffna, died after falling from the roof of his brother’s house while doing some repair work. The incident occurred on the 3rd of this month when a roof beam broke, causing him to fall and suffer serious injuries. He was admitted to the Jaffna Teaching Hospital but succumbed to his injuries yesterday. The sudden death inquiry officer, Namasivayam Premkumar, is investigating the death.