யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 110 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நால்வரும் 18, 21, 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விசாரணைகளின் பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Four young men, aged 18, 21, 22, and 23, have been arrested in the Kurunagar area of Jaffna for possessing 110 mg of heroin and 30 mg of ‘Ice’ drug. The arrests were made by the Jaffna District Anti-Narcotics Division, acting on a tip-off received by the Police Intelligence Unit. The suspects are currently being interrogated, and police are making arrangements to present them before the court.