ராணிப்பேட்டை அருகே பாலாற்றங்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியில், காதலனைத் தாக்கி விரட்டிவிட்டு, இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக மூன்று பேரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக் பகுதியில் அரசு பண்ணைகள் அமைந்துள்ளன.
கூட்டு பாலியல் வன்புணர்வு கடந்த திங்கட்கிழமை இரவு நவ்லாக் அருகே உள்ள பாலாற்றங்கரையில் ஓர் இளம் காதல் ஜோடி தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர், அவர்களிடம் தகராறு செய்தனர்.
பின்னர், அந்த இளைஞனைத் தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டு, அந்த இளம்பெண்ணை மிரட்டி மூன்று பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் சிப்காட் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், ராணிப்பேட்டை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
__________________________________________________________________
Police are investigating three men suspected of gang-raping a young woman in Ranipet, India. The incident occurred on Monday night when the victim was with her boyfriend on the banks of the Palar river. The suspects allegedly assaulted the boyfriend, chased him away, and then threatened and sexually assaulted the woman. The victim’s parents filed a police complaint, and the three suspects were subsequently arrested and are being questioned by the police.