இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை (CEB) பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, முன்மொழியப்பட்ட இந்த கட்டண திருத்தம் குறித்த மக்களின் கருத்துக்களைப் பெற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எழுத்து மூலம் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேபோல், வாய்மொழி மூலம் கருத்துக்களைப் பெறுவதற்காக, ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது பொது ஆலோசனைக் கூட்டங்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்தவுள்ளது.
வாய்மொழி கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கான இந்த ஆலோசனைக் கூட்டங்கள் செப்டம்பர் 18, 2025 அன்று தொடங்கவுள்ளன.
மேலும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஒக்டோபர் 7, 2025 க்கு முன்னர் பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்கலாம் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல்: [email protected] வாட்ஸ்அப்: 076 427 1030 பேஸ்புக்: www.facebook.com/pucsl அஞ்சல்: மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் – 2025 குறித்த பொது ஆலோசனை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு 3.
The Public Utilities Commission of Sri Lanka (PUCSL) has announced that the Ceylon Electricity Board (CEB) has proposed a 6.8% increase in electricity tariffs for the final quarter of 2025. In response, the PUCSL will conduct public consultations, both written and oral, to gather feedback and recommendations from the public. Written submissions are due by October 7, 2025, and oral sessions will begin on September 18, 2025.