கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த, ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பந்தகிரிய பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது தந்தையும் மகளும் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
கோர விபத்து
இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை தெரிவித்ததாவது: “எனது மகள் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு வந்தாள். மாலையில் பேருந்து இல்லாததால், நான் அவளை எனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். அவள் தலைக்கவசம் அணியவில்லை.
எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்துகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி, அந்த முச்சக்கர வண்டியை முந்த முயற்சித்தது. நாங்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், எங்கள் முன்னால் இருந்த வேனின் வலது பக்கத்தில் மோதியதால், நாங்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டோம்.
எனக்கு சுயநினைவு திரும்பியபோது, நான் மருத்துவமனையில் இருந்தேன். எனது வலது காலும் வலது கையும் காயமடைந்திருந்தன. எனது மகளின் தலையிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. 9 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை” என அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
_____________________________________________________________________
A 22-year-old student from the University of Colombo died from injuries she sustained in a motorcycle accident while riding with her father. The father explained that a van suddenly turned in front of them, causing their motorcycle to collide with it. Both were thrown from the bike. While he survived with injuries to his leg and arm, his daughter, who was not wearing a helmet, suffered a severe head injury and passed away after nine days of treatment.