Saturday, September 13, 2025

ஒரே நாளில் டிரெண்ட் ஆன ஹோட்டல் வேலை செய்த பாடகர் – நெட்டிசன்ஸ் ஆச்சரியம்!

இணையத்தில் ஒரே நாளில் டிரெண்டான திரைப்படப் பாடகர் சத்யன் மகாலிங்கம் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இணையத்தின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, பழைய நிகழ்வுகளும் அவ்வப்போது மீண்டும் டிரெண்டாகி வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் இப்போது ஒரு பாடல் இணைந்துள்ளது. தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த, ‘காதலர் தினம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடல் இது.

சமீபத்தில், ஒரு இளைஞர் 26 வருடங்களுக்கு முன்பு ஒரு மேடை நிகழ்ச்சியில் இந்தப் பாடலை அப்படியே பாடிய பழைய வீடியோ இணையத்தில் திடீரென வைரலானது. ஒரே நாளில் இந்தப் பாடல் டிரெண்டானதால், அந்தப் பாடலைப் பாடியவர் யார் என ரசிகர்கள் தேடத் தொடங்கினர். அவர் திரைப்பட பின்னணிப் பாடகர் சத்யன் மகாலிங்கம் என்பது தெரியவந்தது. மேடைப் பாடகராகப் பல பாடல்களைப் பாடி வந்த சத்யன் மகாலிங்கத்தின் திறமை, அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

அதன்படி, அவர் ‘வசூல் ராஜா’ திரைப்படத்தில் “கலக்கப் போவது யாரு”, ‘கழுகு’ திரைப்படத்தில் “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”, ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் “சில் சில் மழையே”, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் “அட பாஸ் பாஸ்”, ‘துப்பாக்கி’ படத்தில் “குட்டி புலி கூட்டம்”, ‘நேபாளி’ படத்தில் “கனவிலே கனவிலே”, ‘மாற்றான்’ படத்தில் “தீயே தீயே”, ‘பானா காத்தாடி’ படத்தில் “குப்பத்து ராஜாக்கள்” போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடினார்.

சத்யன் பாடிய பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றாலும், அது பாடகர் சத்யன் மகாலிங்கத்திற்கு பெரிய அளவில் புகழைத் தேடித் தரவில்லை. இடையில் ‘விழித்திரு’ படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். இந்தக் காலகட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக வாய்ப்புகளின்றி தவித்த சத்யன், பொருளாதாரத் தேவைக்காக ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சத்யன் 26 ஆண்டுகளுக்கு முன் மேடையில் பாடிய ‘ரோஜா ரோஜா’ பாடல் தற்போது மீண்டும் வைரலாகி, அவரை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த திடீர் பிரபலத்தைத் தொடர்ந்து சத்யன் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், அன்று ‘ரோஜா ரோஜா’ பாடலை மேடையில் தன்னுடன் சேர்ந்து பாடிய பாடகி ஒருவரையே சத்யன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதுதான்.

A 26-year-old video of singer Sathyan Mahalingam performing the song “Roja Roja” from the movie “Kaadhalar Dhinam” has gone viral, bringing him back into the limelight. The sudden popularity of the video has prompted the singer to release a video expressing his gratitude to his fans. Despite singing many hit songs in films, Sathyan’s career faced challenges, reportedly leading him to take a job at a hotel during the pandemic. An interesting fact revealed in the viral trend is that he married the singer who performed the chorus with him in that very same video 26 years ago.

Hot this week

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல்

சுகாதார அமைச்சினால் புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நடந்த சம்பவம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை...

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை...

Clerical Assistant vacancy

வேலைவாய்ப்பு தரணிக்குளம் fosdoo கட்டிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட BEETA CAMPUS கல்வி நிலையத்திற்கு...

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில்...

Topics

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல்

சுகாதார அமைச்சினால் புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நடந்த சம்பவம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை...

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை...

Clerical Assistant vacancy

வேலைவாய்ப்பு தரணிக்குளம் fosdoo கட்டிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட BEETA CAMPUS கல்வி நிலையத்திற்கு...

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில்...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி தெற்கு பகுதியில் பிறந்து நான்கு நாட்களே ஆன...

கமல், ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி!

நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img