கரந்தெனிய பகுதியில் தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் நேற்று (11) ஒரு பெண்ணும், ஆணும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கொட்டவெல, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயது தாயும், 25 வயது மகனும் என பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 43 வயதுடைய நபர், கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளது. எனினும், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சந்தேகநபரை கைது செய்வதற்காக கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
___________________________________________________________________
Police have identified a suspect in the murder of a mother and son in the Kapulagoda area of Karandeniya. The victims, aged 74 and 25, were killed yesterday by a sharp weapon. The suspect, a 43-year-old man, is a neighbor of the victims. The motive for the crime is unknown, and the Karandeniya police are currently conducting further investigations to apprehend the suspect.