தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை (Lab Technician) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலை ஊழியர்
அப்போது, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு ஊழியர், அந்தப் பெண்ணுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி மயக்க ஊசி செலுத்தியுள்ளார். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அந்த நபர் அறையிலிருந்து வெளியேறியதும், இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது, தங்கள் மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம், “இப்போது வெளியே சென்றவர் யார்?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து பொலிஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர் வைத்திருந்த தொலைபேசியைச் சோதனை செய்தபோது, அதில் ஆபாசப் படங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொலிஸார் தொடர்ந்து அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
__________________________________________________________________
A lab technician at a private hospital in the Jagityal district of Telangana, India, has been arrested for sexually assaulting a 20-year-old female patient. The young woman was admitted for typhoid fever when the technician allegedly gave her an anesthetic injection and assaulted her while she was unconscious. Her parents discovered her in a distressed state and immediately reported the incident to the police. Police have since arrested the suspect and are conducting further investigations after discovering obscene content on his phone.