மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
____________________________________________________________________
The Department of Meteorology has forecast light rainfall for the Western and Sabaragamuwa provinces, as well as the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Rain or thunderstorms are also expected in many places in the Eastern and Uva provinces after 1:00 PM. The public is advised to take necessary precautions to mitigate potential risks from strong winds and lightning during thunderstorms.