பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மூவரைக் காயப்படுத்திய சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டு, தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து, ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது. அதன்படி, நேற்று (12) மதியம், தமன பொலிஸ் பிரிவில் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் முன்பு இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், 2015ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
____________________________________________________________________
A suspect has been arrested in connection with a shooting incident that killed two people and injured three others at the Sahaspura Sirisara Uyana sports ground in the Borella police division. The suspect, a 34-year-old man from Damana, Ampara, was found in possession of 10.710 grams of ‘Ice’ drug and a motorcycle. Investigations revealed that he is a former Sri Lanka Army soldier who deserted in 2015. The suspect was handed over to the Damana police, who are conducting further investigations.