அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வழங்குவதால், புறக்கோட்டையில் உள்ள மொத்த அரிசி வர்த்தகர்கள் அதை விற்பனை செய்வதை தவிர்த்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையைப் பார்த்து, சில்லறை விற்பனையாளர்களும் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்யத் தயங்குவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இதற்கு முற்றிலும் மாறாக, பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் லாபம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே அரிசி பற்றாக்குறையை உருவாக்குகின்றனர். எனவே, அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகளை வழங்க வேண்டும் என தேசிய விவசாயிகள் ஒன்றியம் வலியுறுத்துகிறது.
Consumers are facing a shortage of Keeri Samba rice, as wholesalers and retailers are hesitant to sell it at the government-controlled price. While one producers’ association is urging the government to lift the price cap, another millers’ association accuses large-scale mill owners of creating an artificial shortage for profit. The National Farmers’ Union is calling for immediate government intervention to resolve the issue.