இலங்கையில் இணையதளங்கள் ஊடாகப் பாலியல் தொழில் தளங்களின் விரைவான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குச் சுற்றுலா விசாவில் வரும் பல சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி பயன்பாடுகளில், தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் தொழில் விளம்பரங்கள் வெளிப்படையாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்தத் தளங்கள், பாலியல் வர்த்தகத்தை மேலும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளன.
பாரம்பரிய பாலியல் விடுதிகள் அல்லது உடற்பிடிப்பு நிலையங்கள் போலன்றி, இணையச் சேவை வழங்குநர்கள், டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடன் இணைவதும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொலிஸார் இது குறித்து விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
__________________________________________________________________
Police in Sri Lanka are focusing on controlling the rapid growth of online platforms for sex work. Reports indicate that many tourists on visitor visas are engaging in these activities, which is raising concerns. Hundreds of advertisements for sex work are openly displayed daily on social media and mobile apps. Unlike traditional brothels or massage parlors, these online platforms use digital payment methods to connect with customers. Authorities are intensifying their investigations to curb these illegal activities.