Tuesday, September 16, 2025

கனடாவில் வீட்டு விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனேடிய வீட்டு மனை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நாடு முழுவதும் 40,257 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையான 39,522 வீடுகளை விட 1.9% அதிகம். அத்துடன், மாதந்தோறும் விற்பனை 1.1% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து மொத்தமாக 12.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக வீட்டு விற்பனை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

“பொதுவாக ஒக்டோபர் காலத்தில் புதிய வீடுகள் சந்தைக்கு வரும். அத்துடன், இந்த வாரம் கனடா வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால், வீடுகளை வாங்க நினைப்பவர்களின் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வீட்டுப் பட்டியல்கள் மாதந்தோறும் 2.6% உயர்ந்துள்ளன. ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் விற்பனைக்கு இருந்த வீடுகளின் எண்ணிக்கை 1,95,453 எனப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 8.8% அதிகமாகும். 2025 ஆகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை 664,078 டொலர்களாக இருந்தது, இது கடந்த ஆண்டைவிட 1.8% அதிகமாகும்.

______________________________________________________________________

According to the Canadian Real Estate Association, home sales in Canada have risen to a four-year high in August 2025. The number of homes sold nationwide increased by 1.9% compared to August 2024, reaching 40,257 units. This marks the fifth consecutive month of sales growth. The average price of homes sold in August was $664,078, a 1.8% increase from the previous year. It is expected that sales may increase further if the Bank of Canada lowers its interest rate.

Hot this week

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

பிறந்து 15 நாளான பச்சிளம் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயே குளிர்சாதனப்...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

Topics

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

படுக்கையில் உயிரிழந்த பெண்: பிரேதப் பரிசோதனையில் வெளியான உண்மை!

படுக்கையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர்...

திவுலப்பிட்டிய பகுதியில், மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்த பெண் கைது

கம்பஹா - திவுலப்பிட்டியவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை...

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img