கனடாவில் மொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 1.9% ஆக உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பணவீக்க உயர்விற்குப் பெட்ரோல் விலைகளின் அதிகரிப்பு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை மாதந்தோறும் 1.4% உயர்ந்தது. வருடாந்திர அடிப்படையில் விலை 12.7% குறைந்திருந்தாலும், ஜூலை மாதத்தில் இருந்த 16.1% குறைவோடு ஒப்பிடும்போது, இந்த வீழ்ச்சி சற்று குறைந்துள்ளது.
பெட்ரோல் விலையின் தாக்கம் நீங்கலாக, மொத்தப் பணவீக்க விகிதம் 2.4% ஆக உள்ளது. இது கடந்த மூன்று மாதங்களை விடச் சற்று குறைவானதாகும். ஆகஸ்ட் மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 3.5% உயர்ந்துள்ளன. அத்துடன், இறைச்சி விலைகள் 7.2% உயர்ந்துள்ளன.
வீட்டு வாடகை மற்றும் வீட்டுக் கடன் வட்டிச் செலவுகள் ஆகியவை ஆண்டிற்கான பணவீக்கத்தை உயர்த்தும் முக்கிய காரணிகளாக தொடர்ந்து இருந்து வருவதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
____________________________________________________________________
According to Statistics Canada, the total inflation rate in Canada increased to 1.9% in August. This rise is primarily attributed to an increase in gasoline prices, which rose by 1.4% on a monthly basis. While gasoline prices are still down 12.7% annually, this is a less significant drop than the 16.1% decrease seen in July. Excluding gasoline, the inflation rate was 2.4%, a slight decrease from the previous three months. In August, grocery prices rose by 3.5% and meat prices by 7.2%. Housing costs, including rent and mortgage interest expenses, continue to be key drivers of inflation.