நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்தது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அஜித்தின் கெரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ளது.
அஜித் மீது ரசிகைகளுக்கு மட்டுமின்றி பல நடிகைகளுக்கும் ‘Crush’ ஏற்பட்டுள்ளது. அதை அவர்களில் பலர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். அப்படி தனக்கு அஜித் மீது ‘Crush’ இருந்ததாக பிரபல நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் தங்கையான இவர் அஜித்துடன் இணைந்து ‘நேசம்’ மற்றும் ‘உல்லாசம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஒரு தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடிகை மகேஸ்வரி, “எனக்கு அஜித் மீது ‘Crush’ இருந்தது. அவருடன் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.
படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித்தைப் பார்க்க முடியாமல் வருத்தத்துடன் இருந்த மகேஸ்வரியிடம், அஜித்தே வந்து பேசியுள்ளார். அப்போது, “நீ எனக்கு தங்கை போல்” என்று அஜித் கூறியிருக்கிறார். இந்த தகவலை நடிகை மகேஸ்வரி அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
In a recent interview, actress Maheswari, the sister of late actress Sridevi, revealed that she had a “crush” on actor Ajith. Maheswari, who has worked with Ajith in two films, shared that during their last day of shooting, a disheartened Maheswari was approached by Ajith himself, who told her that she was like a sister to him.