யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைக்கப்பட்டு பூட்டப்பட்ட ஒரு கடையை, அதிலிருந்த வியாபாரி சட்டவிரோதமாகத் திறந்து, வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது அந்தக் கடையை மாநகர சபை முழுமையாகத் தன் வசம் எடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் நகரில் மாநகர சபைக்குச் சொந்தமான ஒரு சந்தைக்கடையில் (சிற்றங்காடி) வியாபாரம் செய்து வந்த ஒரு நபர், மாநகர சபையின் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆனால், அந்த வியாபாரி, மாநகர சபை மூடிய அந்தக் கடையின் சீலை அகற்றி, மீண்டும் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
இந்த விவகாரம் மாநகர சபை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் வருமான வரி பரிசோதகர்கள் மற்றும் சில அதிகாரிகளைக் கடைக்கு அனுப்பி, மீண்டும் கடைக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அவர்கள் கடைக்குச் சென்றபோது, அங்கிருந்த வியாபாரி அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மாநகர சபை முதல்வர், யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்து, அவர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். வியாபார நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, கடைக்கு மீண்டும் சீல் வைத்ததோடு, கடையின் பொறுப்பை மாநகர சபை மீண்டும் எடுத்துக்கொண்டதாகவும் அறிவித்துச் சென்றார்.
A shop sealed by the Jaffna Municipal Council for violating regulations was illegally reopened by the shopkeeper. Upon learning of this, the Mayor of Jaffna alerted the police, went to the location, and permanently took control of the shop.