போதைப்பொருள் சோதனை எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்து தங்க நகைகளைத் திருடிய விமானப்படை சிப்பாய்கள் இருவர் கைது!
பேராதனைப் பகுதியில் போதைப்பொருள் சோதனை செய்வதாகக் கூறி வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களைத் திருடிய இரண்டு விமானப்படை சிப்பாய்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், தலாதுஓயா விமானப்படை முகாமில் கடமையாற்றும் இந்த இரு சிப்பாய்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடமிருந்து 469,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் ஏனைய பொருட்களையும் இவர்கள் திருடியுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் ரத்தோட்டை மற்றும் கொப்பேகடுவே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடைய சிப்பாய்கள் ஆவர். மேலதிக விசாரணைகளை பேராதனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Two Sri Lankan Air Force personnel have been arrested by police in Peradeniya for allegedly posing as drug enforcement officers to enter a house and steal gold jewelry and other valuables worth 469,000 rupees. The suspects, who are 31 and 32 years old, were stationed at the Thalaudoya Air Force camp. The Peradeniya police are conducting further investigations.