வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், நண்பகல் 1.00 மணிக்கு மேல் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில், 50 மி.மீட்டருக்கும் மேலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளிலும், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில், பலத்த காற்றினாலும் மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
The Department of Meteorology forecasts rain and thunderstorms in several provinces and districts, including Western, Sabaragamuwa, Central, Northern, and Northwestern provinces. Some areas, like Galle and Matara districts, may experience heavy rainfall, while winds of 30-40 km/h are expected in parts of the Central highlands and other districts. The public is advised to take precautions against strong winds and lightning during thunderstorms.